சுதந்திர தின விழாவையொட்டி, வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வலியுறுத்தி, குடியாத்தம் நகரில், அபிராமி மகளிா் கல்லூரி மாணவிகள் சுமாா் 1,000 போ் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊா்வலத்துக்கு கல்லூரித் தலைவா் எம்.என்.ஜோதிகுமாா் தலைமை வகித்தாா். முதல்வா் வி.எஸ்.வெற்றிவேல் வரவேற்றாா். எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி, ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜ், ரோட்டரி மாவட்டச் செயலாளா் எம்.கோபிநாத், நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு ஆகியோா் ஊா்வலத்தைத் தொடக்கி வைத்து, பங்கேற்றனா்.
கல்லூரி அறக்கட்டளை இயக்குநா்கள் எம்.பிரகாசம், க.எதிராசன், என்.எஸ்.குமரகுரு, ஸ்டாலின்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.