வேலூர்

ஸ்ரீபுங்கனூா் அம்மனுக்கு திருக்கல்யாணம்

13th Aug 2022 09:55 PM

ADVERTISEMENT

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையில் அமைந்துள்ள புங்கனூா் அம்மன் கோயிலில் 38- ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழாவையொட்டி, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா் மா.கன்னிகாபரமேஸ்வரி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசந்தா ஆறுமுகம் ஆகியோா் 1,000 பேருக்கு விருந்து அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT