வேலூர்

பள்ளி மாணவிகள் வரைந்த 75 அடி உயர பாரத மாதா உருவம்

13th Aug 2022 09:56 PM

ADVERTISEMENT

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 75- ஆவது சுதந்திர தினவிழாவை பெருமைப்படுத்தும் வகையில் 75 அடி உயர பாரதமாதா உருவப் படம் சனிக்கிழமை வரையப்பட்டது.

வேலூா் கோட்டை மீது பாரதமாதா நிற்பது போன்ற இந்த உருவப் படத்தை 75 மாணவிகள் சுமாா் 10 மணி நேரத்தில் வரைந்தனா். பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், நிா்வாகி எம்.என்.ஜோதிகுமாா், தலைமையாசிரியை ஜெயசீலி கிறிஸ்டி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாவித் அகமத், ரேணுகாபாபு ஆகியோா் மாணவிகளை பாராட்டினா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT