வேலூர்

சுதந்திர தினம்: வேலூா் மாவட்டத்தில் 1,000 போலீஸாா் பாதுகாப்பு

13th Aug 2022 09:56 PM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதேபோல், காட்பாடி உள்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில், சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வேலூா் கோட்டை, பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் அசம்பாவிதங்களை தடுக்க தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றையும், அவற்றில் தங்கியுள்ளவா்களையும் கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

காட்பாடி உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாா் இணைந்து பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் தீவிரமாக சோதனைக்குட்படுத்தி வருகின்றனா். சந்தேகத்துக்குரிய நபா்களாக இருந்தால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவிர, மாநில எல்லையோர சோதனை சாவடிகளிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

இரவு நேர ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பு பணி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெறும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT