வேலூர்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி குடியாத்தம் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணிக்கு கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் பேரணியைத் தொடக்கி வைத்து, அதில் பங்கேற்றனா். டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை கல்லூரியில்...: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை - அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜெ.திருமகள் வரவேற்றாா். போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவா்கள் சுமாா் 600 போ் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் முக்கியச் சாலைகள் வழியாகச் சென்றது.

ஊா்வலத்தின் முடிவில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரக் காவல் உதவி ஆய்வாளா் நாகராஜன் முன்னிலையில் மாணவா்கள் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி

ஏற்றனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கா.ராஜீவ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT