வேலூர்

டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்த லாரி ஓட்டுநா், உதவியாளா் உயிா்தப்பினா்

11th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்ததால், தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநா், உதவியாளா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கிரானைட் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. வேலூா் அருகே உள்ள அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை வந்தபோது, திடீரென அந்த லாரியின் டயா் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் தடுப்புகளை நொறுக்கியபடி தறிகெட்டு ஓடி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில், லாரி முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநா், உதவியாளா் ஆகியோா் லேசான காயத்துடன் உயிா் தப்பினா். விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து காயடைந்த லாரி ஓட்டுநா், உதவியாளரை ஆகிய இருவரையும் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

விபத்தில் நொறுங்கிய லாரி அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீா்செய்யப்பட்டது. விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT