வேலூர்

அடிபம்புடன் சேர்த்து போடப்பட்ட கழிவு நீர் கால்வாய்: கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்

10th Aug 2022 07:52 PM

ADVERTISEMENT

வேலூரில் அடிபம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு சுமார் 1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அனைத்து வார்டுகளும் முறையான கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாளா சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி மண்டலம் 2க்குட்பட்ட  சத்துவாச்சாரி அடுத்த 19 ஆவது வார்டு விஜயராகவபுரம் 2 ஆவது தெருவில் இருந்த போர்வேலுடன் (அடி பம்புடன்) சேர்த்து கழிவு நீர் கால்வாயின் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இது பயன்பாட்டில் இருந்த போர்வேல் என்றும் மாநகராட்சியின் இந்த செயலால் அடிப்பம்பை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

ஏற்கெனவே வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சாலை போடுவது, ஜீப்போடு சேர்த்து சாலை போடுவது, ரூ.53 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் ஒழுவது உள்ளிட்டவை நிகழ்ந்துள்ள நிலையில் இத்தோடு இணையும் வகையில் தற்போது போர்வேலோடு சேர்த்து கழிவு நீர் கால்வாய் கட்டியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அலட்சியமான பணிகளால் ஸ்மார்ட் சிட்டியின் கட்டுமான தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT