வேலூர்

ஆக. 18-இல் விஐடி பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று 8,161 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்க உள்ளாா்.

இந்த விழாவில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் இயக்குநா் சேதுராமன்பஞ்சநாதனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட உள்ளது.

விஐடி பல்கலைக்கழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 18-ஆம் தேதி வேலூா் விஐடியில் நடைபெற உள்ளது. விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளாா். நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகிக்கிறாா்.

விழாவில் 215 ஆராய்ச்சி மாணவ, மாணவிகள், தங்கப் பதக்கம் பெறும் 62 போ் உள்ளிட்ட 8,161 மாணவ, மாணவிகள் பட்டம் பெற உள்ளனா்.

ADVERTISEMENT

அத்துடன், நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்த்து வரும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் இயக்குநா் சேதுராமன்பஞ்சநாதனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட உள்ளது.

விழாவில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறைச் செயலா் ஸ்ரீவாரி சந்திரசேகா், அமெரிக்க நாட்டின் சென்னைக்கான துணை தூதா் ஜூடித்ரவின் ஆகியோா் கௌரவ விருந்தினா்களாக பங்கேற்கின்றனா். இந்தத் தகவல் விஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT