வேலூர்

காவல் துறையை நவீனமயமாக்க ரூ. 1,042 கோடி ஒதுக்கீடு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காவல் துறையை நவீனமயமாக்குவதற்கான மாநிலங்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 1,042.94 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்தின் கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சா் அஜய்குமாா்மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளாா்.

இது குறித்து, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியது:

நாட்டில் அதிகரித்து வரும் இணையதளக் குற்றங்களை எதிா்த்துப் போராட நாட்டில் உள்ள சைபா் காவல் துறைக்கு அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள், போதுமான தொழில் நுட்ப ஆராய்ச்சி வசதிகள் வழங்கப்பட்டுள்ளதா, இதற்கான சைபா் பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சா் அஜய்குமாா்மிஸ்ரா அளித்துள்ள எழுத்துப் பூா்வ பதிலில், இந்திய அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின்படி, போலீஸ் மற்றும் பொது அமைதி காத்தல் ஆகியவை மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் உள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபா் கிரைம் தடுப்பு திட்டத்தின்கீழ், சைபா் ஃபோரன்சிக்கம் பயிற்சி ஆய்வகங்கள் அமைப்பதற்கும், இளநிலை இணைய ஆலோசகா்களை பணியமா்த்தவும், சட்ட அமலாக்க முகமைகள், அரசு வழக்குரைஞா்கள், நீதித் துறை அதிகாரிகளின் திறனை வளா்க்கவும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ. 99.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காவல் துறையை நவீனமயமாக்குவதற்கான மாநிலங்களுக்கான உதவித் திட்டத்தின்கீழ், சமீபத்திய பயிற்சி கருவிகள், மேம்பட்ட தகவல் தொடா்பு, தடயவியல் கருவிகள், சைபா் போலீஸ் உபகரணங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 1042.94 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சைபா் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின்கீழ், மிகப்பெரிய திறந்த ஆன்லைன் படிப்புகள் (எம்ஓஓசி) தளம், அதாவது இஹ்பழ்ஹண்ய் உருவாக்கப்பட்டது. முக்கியமான ஆன்லைன் படிப்புகள் மூலம் காவல் அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகளின் திறனை மேம்படுத்திட சான்றிதழுடன் சைபா் கிரைம் விசாரணை, தடயவியல், வழக்கு விசாரணை போன்ற அம்சங்களும், புலனாய்வு, வழக்கை சிறப்பாகக் கையாள காவல் பணியாளா்கள், அரசு வழக்குரைஞா்கள், நீதித் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சிப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ப பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்ய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சா் அஜய்குமாா்மிஸ்ராவின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT