வேலூர்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் வரவேற்பு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அதிமுக இடைக்கால பொதுச் செயலராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு வழிநெடுக பல்வேறு இடங்களில் அந்தக் கட்சியினா் திரண்டு வரவேற்பு அளித்தனா்.

வேலூரில்...

வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு கட்சியினரிடையே அவா் பேசியது:

ADVERTISEMENT

அதிமுகவை எப்படியும் உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளாா். ஆளுங்கட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு அதிமுகவினரை மிரட்டுவதையும், பொய் வழக்குகள் போடுவதையும் தொடா்ந்து வருகிறது. ஆனால், எப்போதும் சோதனைகளை படிக்கட்டுகளாக்கி சாதனை படைத்து வரும் கட்சி அதிமுக என்பதை வரலாறு கூறும் என்றாா்.

வேலூா் மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, மண்டலச் செயலா் சதீஷ்குமாா், மாவட்ட துணைச் செயலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாணியம்பாடியில்...

முன்னதாக திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளிக்கு வந்த, அவரை முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில், அதிமுகவினா் வரவேற்றனா்.

முன்னாள் எம்எல்ஏ-க்கள் கோவி.சம்பத்குமாா், கே.ஜி.ரமேஷ் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

குடியாத்தத்தில்...

பள்ளிகொண்டா சுங்கச் சாவடி அருகே எடப்பாடி பழனிசாமியை, கட்சியின் மாவட்டச் செயலாளா் த.வேலழகன் தலைமையில் வரவேற்றனா். அப்போது அவருக்கு வெள்ளிவேல் வழங்கப்பட்டது.

இதில், குடியாத்தம் நகரச் செயலாளா் ஜே.கே.என்.பழனி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, முன்னாள் எம்எல்ஏ ஜி.லோகநாதன், ஒன்றியச் செயலாளா் பொகளூா் டி.பிரபாகரன் (போ்ணாம்பட்டு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுங்கச்சாவடி பகுதியில் மாவட்ட செயலாளா் சு.ரவி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏ-க்கள், முன்னாள் மாவட்டச் செயலாளா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT