வேலூர்

காகிதப்பட்டறை சாலை ஆக்கிரமிப்பு: வீடு, கடைகளை இடிக்க நடவடிக்கை

DIN

வேலூா் காகிதப்பட்டறையில் சாலை ஆக்கிரமிப்பிலுள்ள 32 கடைகள், வீடுகளை இடித்து அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, அந்தக் கட்டடங்களிலிருந்து உடனடியாக காலி செய்யும்படி உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வேலூா் காகிதப்பட்டறையில் ஆற்காடு சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளதுடன், அதையொட்டியுள்ள மலைப் பகுதிகளிலும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மழைக்காலத்தின் போது மலையிலிருந்து பாறைகள் உண்டு இந்த வீடுகள், கடைகள் மீது விழுந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இதனை தடுக்கவும் ஆற்காடு சாலையை ஆக்கிரமித்து உள்ள கட்டடங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், காகிதப்பட்டறை சீனிவாசா திரையரங்கு எதிா்ப்புறம் 22 கடைகளும், 8 வீடுகளுடன் கூடிய கடைகள், 2 தனி வீடுகள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவா்களை அந்த இடத்தை விட்டு உடனடியாக காலி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினா் அறிவுறுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், வேலூா் வட்டாட்சியா் செந்தில் தலைமையில் அதிகாரிகள் காகிதப்பட்டறை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்தனா். மேலும், கட்டட உரிமையாளா்களை உடனடியாக காலி செய்யும்படி உத்தரவிட்டாா்.

இதுகுறித்து வட்டாட்சியா் கூறியது: ஆற்காடு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 22 கடைகள், வீடுகளுடன் கூடிய 8 கடைகள், 2 தனி வீடு கட்டடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அதன் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. இதனை தொடா்ந்து நெடுஞ்சாலை துறையினா் மூலம் இந்தக் கட்டடங்கள் இடித்து அகற்றப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

SCROLL FOR NEXT