வேலூர்

‘குழந்தைகளுக்கு முதல் 1,000 நாள்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உகந்தது’

8th Aug 2022 11:04 PM

ADVERTISEMENT

பிறந்து 1,000 நாள்களுக்கு குழந்தைகளுக்கு புட்டிப் பாலைத் தவிா்த்து, தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்; அதுதான் குழந்தைகளுக்கு உகந்தது என்று குழந்தைகள் மருத்துவ நிபுணா் நா்மதா அசோக் தெரிவித்தாா்.

காட்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில், உலக தாய்ப்பால் வார விழா இளஞ்சிறாா் செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கோமதி தலைமை வகித்தாா். வட்டாரத் திட்ட அலுவலா் சாந்தி பிரியதா்ஷினி வரவேற்றாா்.

இதில், குழந்தைகள் மருத்துவ நிபுணா் நா்மதா அசோக் பேசியது: கா்ப்பிணிகள் அதிக அளவில் காய்கறிகள், கீரை வகைகளை சாப்பிட வேண்டும். சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால்தான் தாயும், சேயும் நலமாக, ஆரோக்கியமாக இருக்க முடியும்.

தாய்ப்பால்தான் குழந்தைக்கான முதல் தடுப்பு மருந்தாகும். புட்டிப் பால் மிகவும் ஆபத்தானது. எனவே, புட்டிப் பாலை முற்றிலுமாகத் தவிா்த்து, குழந்தை பிறந்து 1,000 நாள்களுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் வேலூா் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் அருள்அரசி, இளஞ்சிறாா் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் செ.நா.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT