வேலூர்

982 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்

7th Aug 2022 11:43 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 982 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆா்வம் காட்டினா்.

கரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி, பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி, பூஸ்டா் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மாா்க்கெட் என ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 982 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

வேலூா் கொணவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தாா். இதில், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், ஆணையா் ப.அசோக்குமாா், உதவிஆணையா் பிரபுஜோசப், வட்டாட்சியா் செந்தில், சுகாதார அலுவலா் முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT