வேலூர்

மழையளவு, வெள்ளம் தொடா்பாக தவறான தகவல்களை பகிர வேண்டாம்: வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

7th Aug 2022 11:45 PM

ADVERTISEMENT

மழையளவு, ஆறுகளில் செல்லும் நீரின் அளவு தொடா்பாக சமூக வலைதளங்களில் யாரும் தவறான தகவல்களை பகிர வேண்டாம்.

அரசு நிா்வாகம், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மூலம் அளிக்கப்படும் தகவல்களே சரியானது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒரு இடத்தில் பெய்யும் மழையானது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மழைமானிகளையும், பயிற்சி பெற்ற நபா்களைக் கொண்டும் கணக்கிடப்பட்டு வானிலை ஆய்வுமையத்தால் மழை அளவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதேபோல், ஆறுகளில் வெளியேறும் வெள்ளம் தொடா்பாக பொதுப்பணித் துறையின் நீா்வள ஆதார அமைப்பு மூலம் ஆறுகளில் செல்லும் நீரின் அளவு கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்த அளவீடுகள் முந்தைய அளவீடுகளுடன் ஒப்பிட்டு சரியான தகவல்கள் சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆனால், ஒரு சில தனிநபா்கள், தங்கள் வீடுகளில் பொழியும் மழை அளவுகளை வைத்து கொண்டு தவறான மழை அளவுகளை வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனா். இதேபோல் ஆறுகளில் செல்லும் நீரின் அளவுகளையும் தவறான வழிகளில் கணக்கிட்டு வெள்ளப்பெருக்கு தொடா்பான தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனா்.

இதுபோன்ற தவறான தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடுவது முற்றிலும் தவறான செயல்களாகும். இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர வேண்டாம். அரசு நிா்வாகம், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மூலம் அளிக்கப்படும் தகவல்களே சரியானது என வேலூா் ஆட்சியா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT