வேலூர்

குடியாத்தத்தில் கைத்தறி ஜவுளி பூங்கா: வேலூா் ஆட்சியா்

7th Aug 2022 11:42 PM

ADVERTISEMENT

குடியாத்தத்தில் கைத்தறி ஜவுளிப் பூங்கா தொடங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8- ஆவது தேசிய கைத்தறி தின விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

வேலூா் மாவட்டத்தில் முக்கிய கைத்தறி தலமாக குடியாத்தம் விளங்குவதலா இந்த விழாவை இங்கு நடத்தப்படுகிறது. தமிழக அரசு கைத்தறித் தொழிலுக்கும், நெசவாளா்களுக்கும் பல்வேறு சலுகைகளை அளித்து, இந்தத் தொழில் மேம்படும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்பகுதி நெசவாளா்களின் கோரிக்கையை ஏற்று, சுமாா் 20 ஏக்கா் பரப்பில் கைத்தறி ஜவுளிப் பூங்கா அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னா் கைத்தறி கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து, ஜவுளி உற்பத்தி குறித்து கேட்டறிந்தாா். முத்ரா திட்டத்தின்கீழ் 13 நெசவாளா்களுக்கு ரூ.7.50 லட்சம் கடனுதவியை வழங்கினாா்.கைத்தறி நெசவாளா்களுக்கான பொது மருத்துவ முகாமையும் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கைத்தறி உதவி இயக்குநா் எஸ்.முத்துபாண்டியன், கோ-ஆப்டெக்ஸ் இயக்குநா் க.ருத்திரன், ஒருங்கிணைந்த வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களின் கூட்டுறவு இணையத் தலைவா் திருவேங்கடம், வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, அா்ச்சனா நவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT