வேலூர்

முதலீட்டாளா்கள் நெருக்கடி: ஐஎப்எஸ் நிதி நிறுவன முகவா் தற்கொலை

7th Aug 2022 11:43 PM

ADVERTISEMENT

ஐஎப்எஸ் தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள், நெருக்கடி கொடுத்ததால் காட்பாடி சேவூரைச் சோ்ந்த அந்த நிறுவன முகவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் காட்பாடியில் இன்டா்நேஷனல் பைனான்ஸ் சா்வீஸ் (ஐஎப்எஸ்) என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 88,000 பேரிடம் ரூ.40,000 கோடி அளவுக்கு முதலீடு திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, முதலீட்டாளா்களுக்கு அசல், வட்டித் தொகைகளைத் திருப்பியளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை, வேலூா் உள்பட 21 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 5-ஆம் தேதி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினா்.

இந்த நிலையில், காட்பாடி காந்தி நகரிலுள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த காட்பாடி சேவூா் கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாா் (28) (படம்), அந்த நிறுவனத்தின் முகவராகவும் செயல்பட்டு வந்தாராம். இவா் மூலம் பொதுமக்கள் பலா், அந்த நிறுவனத்தில் பல லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்ததாகத் தெரிகிறது. முதலீட்டாளா்கள் வினோத்குமாரை தொடா்பு கொண்டு பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், வினோத்குமாா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

காட்பாடி போலீஸாா் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். தற்கொலை செய்து கொண்ட வினோத்குமாா் மூலம் பொதுமக்கள் பலா் ரூ.50 லட்சம் அளவுக்கு ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்ததாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT