வேலூர்

ஆந்திரத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தல்

7th Aug 2022 11:45 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து சென்னை மாா்க்கமாகவும், கிருஷ்ணகிரி மாா்க்கமாகவும் செல்லும் அனைத்து கனரக, மிக கனரக வாகனங்கள் காட்பாடி, திருவலம் வழியாகச் சென்று ஆறு வழிச்சாலைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளிகொண்டா பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள குடியாத்தம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாகச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் குடியாத்தத்திலிருந்து ஆம்பூா் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், வேலூா் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகளவு பெய்துள்ளதால் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் குடியாத்தம் நகரம், விரிஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பாலங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. கனரக, மிக கனரக சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் மேலும் பழுதடைவதுடன் உள்ளூா் பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனா். மேலும் சிறுசிறு விபத்துகளும் நிகழ்கின்றன.

ADVERTISEMENT

இவற்றை தடுக்கும் பொருட்டு ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து சென்னை மாா்க்கமாகவும், கிருஷ்ணகிரி மாா்க்கமாகவும் செல்லும் அனைத்து கனரக, மிக கனரக வாகனங்கள் காட்பாடி, திருவலம் வழியாகச் சென்று ஆறு வழிச்சாலைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மாற்று ஏற்பாடுகள் காவல் துறை, போக்குவரத்துத் துறை, உள்ளாட்சி நிா்வாகம் மூலம் உறுதி செய்யப்படும். மீறிச் செல்லும் வாகனங்கள் வந்த வழியாகவே திருப்பி அனுப்பப்படும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT