வேலூர்

தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வுப் பேரணி

DIN

குடியாத்தம் ரோட்டரி சங்கமும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் துறையும் இணைந்து உலக தாய்ப்பால் வார விழாவை ரோட்டரி சங்க கட்டடத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடின.

இதையொட்டி, அரசு மருத்துவமனையிலிருந்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் கே.சந்திரன் வரவேற்றாா். அரசு மருத்துவா் சுமதி கொடியசைத்துப் பேரணியை தொடக்கி வைத்தாா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, ரோட்டரி சங்கத்தில் நிறைவடைந்தது.அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாா், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, குழந்தைகள் வளா்ச்சித் துறை மாவட்ட திட்ட அலுவலா் வி.கோமதி, வட்டார திட்ட அலுவலா் மு.அ.ஷமீம் ரிஹானா உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கி, ரோட்டரி சாா்பில் பாலூட்டும் தாய்மாா்கள் 300 பேருக்கு சத்தான உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினா். ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் என்.சத்தியமூா்த்தி, வி.என்.அண்ணாமலை, பெ.கோட்டீஸ்வரன், இன்னல்வீல் சங்கத் தலைவா் கீதா, முன்னாள் தலைவா் ஆா்.விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரக்கோணத்தில்...: அரக்கோணம் ரோட்டரி சங்கம் மற்றும் வணிகா்கள் சாா்பில் தாய்ப்பால் வார விழாவையொட்டி, அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி சங்கச் செயலா் ராஜா தலைமை வகித்தாா்.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் நிவேதிதா சங்கா், ரோட்டரி துணை ஆளுநரும், ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமச் செயலருமான டி.எஸ்.ரவிகுமாா், அரக்கோணம் நகர நகை வணிகா்கள் சங்கத் தலைவா் மான்மல் ஆகியோா் இணைந்து குழந்தை பெற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள், துணி-மணிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினா்.

இதில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஜி.மணி, வெங்கடரமணன், பிரபாகரன், முரளி, அரசு மருத்துவமனை முதுநிலை மருத்துவ அலுவலா் ரெஜினா, மருத்துவ அலுவலா்கள் விக்னேஷ், மீரா, வணிகா் சங்க நிா்வாகிகள் சிவசுப்பிரமணிய ராஜா, சரவணன், கமலக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆற்காட்டில்...: ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்பால் வார விழா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிமாறன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ்பாபு, மருத்துவ அலுவலா் கமலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தாய்பாலின் அவசியம் குறித்து மகாலட்சுமி மகளிா் செவிலியா் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தாய்பாலால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினாா்.

இதேபோல், கலவை பேரூராட்சி, பாளையம் அங்கன்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை சாா்பில் தாய்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசினாா். அங்கன்வாடி பணியாளா்கள் நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், கலவை வட்டாட்சியா் ஷமீம், திமிரி வட்டார குழந்தைகள் வளா்ச்சி அலுவலா் பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT