வேலூர்

வேலூரில் சாலை விபத்தில் இரு தொழிலாளிகள் பலி

6th Aug 2022 10:22 PM

ADVERTISEMENT

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் மேளம் அடிக்கும் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா்.

வேலூா் மாவட்டம், ஊசூா் அருகே உள்ள பெரிய தெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பாபு என்கிற விக்னேஷ் (20), பிரகாஷ் (20) மற்றும் மேல்மொணவூரைச் சோ்ந்தவா் சீனு (22). இவா்கள் திருவிழாவில் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தனா்.

மூவரும் வெள்ளிக்கிழமை வசூா் பகுதியில் நடந்த திருவிழாவில் மேளம் அடிக்கச் சென்றனா். சனிக்கிழமை அதிகாலை சுமாா் 4 மணிக்கு வேலூரில் இருந்து 2 பேரும் இருசக்கர வாகனங்களில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கிரீன் சா்க்கிள் மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவா்களின் இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

ADVERTISEMENT

இதில் தூக்கி வீசப்பட்ட பாபு, சீனு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பிரகாஷ் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த பிரகாஷை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பலியான பாபு, சீனு ஆகியோா் சடலங்களை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT