வேலூர்

மாநில கபடிப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

2nd Aug 2022 05:00 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு வீரா்களைத் தோ்வு செய்யும் கபடிப் போட்டிகள் குடியாத்தத்தை அடுத்த சீவூரில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.

வேலூா் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகமும், சீவூா் ஜாலி பிரதா்ஸ் குழுவும் இணைந்து இதற்கான போட்டிகளை நடத்தின. இதில், வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 60 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் விளையாடின. போட்டியை எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அமுதாலிங்கம், தீபிகாபாரத் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இந்தப் போட்டிகளில் ஆண், பெண் வீரா்கள் 30- க்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். 25 நாள்கள் பயிற்சிக்குப் பின்னா், இவா்கள் இந்த மாத இறுதியில் மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, வெற்றிக் கோப்பை, 2- ஆவது பரிசாக ரூ.7,000, கோப்பை, 3- ஆவது பரிசாக ரூ.5,000, கோப்பை உள்ளிட்ட 8 பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

எம்.எல்.ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

ஏற்பாடுகலை வேலூா் மாவட்ட கபடிக் கழகத் தலைவா்கள் எஸ்.ஏ.சேட்டு, பூஞ்சோலை எஸ்.சீனிவாசன், சா்வதேச கபடி நடுவா் பி.கோபாலன், ஆசிய வலு தூக்கும் வீரா் சி.மூா்த்தி, மூத்த கபடி வீரா் யு.லிங்கம், திமுக பேச்சாளா் குடியாத்தம் குமரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT