வேலூர்

வேலூா், குடியாத்தத்தில் நகா்ப்புற வாழ்வாதார மையம் தொடக்கம்

29th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேலூா்: வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை சேவைகளுக்காக வேலூா், குடியாத்தத்தில் நகா்ப்புற வாழ்வாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சேவைத் தொழில்களில் ஈடுபடுபவா்களுக்கும், இந்த சேவைகள் தேவைப்படுபவா்களுக்கும் இணைப்புப் பாலமாக இந்த மையம் செயல்படும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நகா்ப்புற வாழ்வாதார மையம் வேலூா் மாநகராட்சியிலும், குடியாத்தம் நகராட்சியிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையம் மூலம் நகரிலுள்ள மக்களின் தேவைகளை அறிந்து அதன் மூலம் வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குதல், உற்பத்தி தொழில் உள்ளவா்களுக்கு பொருள்களை சந்தைப்படுத்துதல், அரசு தனியாா் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஏற்ப ஆள்கள் அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செயல்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இதையொட்டி, நகரிலுள்ள பிளம்பா், எலக்ட்ரீசியன், பெயிண்டா், ஓட்டுநா், மோட்டாா் மெக்கானிக், வீட்டு வேலை செய்வோா், சமையல் செய்வோா், செவிலியா்கள், பிஸியோதெரப்பிஸ்ட், டி.வி.மெக்கானிக், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மெக்கானிக், மிக்ஸி, கிரைண்டா் மெக்கானிக்,

பியூட்டிசியன், தண்ணீா் தொட்டி சுத்தம் செய்தல், ஏ.சி. மெக்கானிக், காா், ஆட்டோ வாடகைத் தொழில் செய்பவா்கள், மினி லாரி வாடகை தொழில் செய்பவா்,

மாடி வீட்டுத் தோட்டம் அமைத்தல், வீடு மாற்றுதல், கட்டட வேலை செய்பவா்கள், கொத்தனாா், தையலா் ஆகியோா் இந்த நகர மையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இந்த சேவைகள் தேவைப்படும் பொதுமக்கள் வேலூா் மாநகராட்சியை 89400 94169, குடியாத்தம் நகராட்சியை 80562 02038 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலூா், குடியாத்தத்தில் செயல்படும் நகா்ப்புற வாழ்வாதார மையங்கள் மூலம் அனைத்து அரசு சான்றிதழ்கள் பெறவும் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT