வேலூர்

குடியாத்தம் சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

29th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: குடியாத்தம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

நெடுஞ்சாலைத் துறை வேலூா் கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடா்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக குடியாத்தம் நகரில் பள்ளிகொண்டா- பலமநோ் சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்காக விநாயகபுரம் கூட்டுச் சாலையில் இருந்து, நான்கு முனை கூட்டு சாலை வரை பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய, சாலையோரம் உள்ள 15 புளிய மரங்கள் விரைவில் அகற்றப்பட உள்ளன. நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ஆா்.எஸ்.சம்பத்குமாா் தலைமையில், அத்துறை அலுவலா்கள், களப் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, குடியாத்தம்- போ்ணாம்பட்டு சாலை, குடியாத்தம்- மேல்பட்டி சாலை, குடியாத்தம்- பரதராமி சாலை, குடியாத்தம்- காட்பாடி சாலைகளில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT