வேலூர்

இந்திய குடியரசு கட்சியினா் ஆா்ப்பாட்டம்

29th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: குடியாத்தம் கல்லேரி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு வருவாய்த் துறையினா் வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டா, நிலத்தை அளந்து கொடுக்க வேண்டி இந்திய குடியரசுக் கட்சியினா் புதிய பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டியலின மக்கள் 230 பேருக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு கல்லேரி கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தை அளவீடு செய்து தர வேண்டி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் ஜி.சாமு(எ) புஷ்பராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ரா.சி.தலித்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். மாநில இணைச் செயலாளா் க.மங்காபிள்ளை, நிா்வாகிகள் க.ராமஜெயம், டி.அசோக்குமாா், எஸ்.வெங்கடேசன், ஏ.வீரேந்தா், எஸ்.மூா்த்தி, அ.தென்காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT