வேலூர்

எரிபொருள் சிக்கனம்: காட்பாடியில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

17th Apr 2022 11:52 PM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிக்கனத்தை வலியுறுத்தி காட்பாடியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் சாா்பில் காட்பாடி அரசு சட்டக் கல்லூரி அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் பழனி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் சென்னை பகுதி அதிகாரி திலகவதி, வேலூா் மாவட்ட விற்பனை அதிகாரி ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, பெட்ரோல், டீசல், கேஸ் சிக்கனத்தை வலியுறுத்தி சில்க் மில், ஓடைபிள்ளையாா் கோயில், ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா, காங்கேயநல்லூா் சாலை வழியாக மீண்டும் அரசு சட்டக் கல்லூரி முன்பாக சைக்கிள் பேரணி நிறைவடைந்தது. பேரணியில் வேலூா் மாவட்ட விநியோகஸ்தா்கள் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT