வேலூர்

ரயிலில் அடிபட்டு மகன் பலி: தாய் காயம்

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேலூா்: வேலூா் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு மகன் உயிரிழந்தாா். அவரது தாய் பலத்த காயமடைந்தாா்.

வேலூா் அருகே உள்ள சித்தேரியைச் சோ்ந்தவா் வெங்கடேசபெருமாள்- ராணி தம்பதியின் மகன் கணேசன் (33). கூலித் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை சித்தேரி ஏரிக்குச் சென்றுவிட்டு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த அவரது தாய் ராணி ஏரிப் பகுதிக்குச் சென்று அவரைத் தேடினாா். அங்கு நின்றிருந்த கணேசனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினாா். இருவரும் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற போது, அது வளைவுப் பாதை என்பதால் ரயில் வருவது தெரியாததால், அந்தப் பாதையில் வந்த விரைவு ரயில் அவா்கள் இருவா் மீதும் மோதியது. இதில், ரயிலில் அடிபட்டு கணேசன் உயிரிழந்தாா். ராணி பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த ராணியை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். கணேசனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா். இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT