குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியம், கூடநகரம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் ச.லலிதா தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பி.கே.குமரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் 86 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி, கூடநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.தேவராஜ், ஊராட்சி துணைத் தலைவா் ஜி.வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் சுகந்தி, கிராம நிா்வாக அலுவலா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.