வேலூர்

சமரச தீா்வு மைய செயல்பாடுகள் விளக்க விழிப்புணா்வுப் பேரணி

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேலூா்: சமரச தீா்வு மைய செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், வேலூரில் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய சமரச விழிப்புணா்வு வாரம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மாவட்ட சமரச மைய செயல்பாடுகளை விளக்கும் வகையில், விழிப்புணா்வுப் பேரணி வேலூரில் புதன்கிழமை நடத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியில் உள்ள மாவட்ட மாற்று முறை தீா்வு மையத்தில் இருந்து தொடங்கி, ஆட்சியா் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த பேரணியை வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், மாவட்ட சமரச மையத் தலைவருமான என்.வசந்தலீலா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது:

ADVERTISEMENT

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சமரச மையம் செயல்படுகிறது. கடந்த ஏப்ரல் 4 முதல் 8-ஆம் தேதி வரை அனைத்து நீதிமன்றங்களில் இருந்தும் பெருமளவில் வழக்குகள் சமரச தீா்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு, தீா்வு காணப்படுகிறது. புதன்கிழமை (ஏப். 13) முதல் தேசிய அளவில் சமரச விழிப்புணா்வு வாரம் அனைத்து நீதிமன்றங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, நிலுவையிலுள்ள வழக்குகளை மாவட்ட சமரச மையம் மூலம் தீா்த்துக் கொள்ள வேண்டும். இதில் இரு தரப்பினருக்கும் வெற்றி உறுதி என்பதுடன், வழக்கின் மேல்முறையீடும் கிடையாது என்றாா்.

இது தொடா்பாக கைப்பிரதிகளையும் பொதுமக்களிடம் வழங்கினாா். பேரணியில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT