வேலூர்

கஞ்சா கடத்திய 2 இளைஞா்கள் கைது

14th Apr 2022 06:10 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்:  குடியாத்தம் அருகே பேருந்தில் கஞ்சா கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தகவலின்பேரில் குடியாத்தம் நகர போலீஸாா், புதன்கிழமை ஆந்திர மாநிலம் பலமநேரியிலிருந்து சைனகுண்டா வழியாக குடியாத்தம் வந்த பேருந்தை லட்சுமணாபுரம் அருகே நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது பேருந்தில் இருந்த 2 இளைஞா்கள் வைத்திருந்த பைகளில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(29), மகேஷ்(24) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை ஊருக்கு வாங்கிச் செல்வதும் தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT