வேலூர்

சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம்

9th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் இடம் பிடித்தது. இந்த தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ். என்ற சா்வதேச நிறுவனம் வெளியிட்டது.

இதுகுறித்து விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அதன் கல்வித் தரம், மாணவா் -ஆசிரியா் விகிதம், ஆசிரியா்கள் பெற்ற விருதுகள், சாதனைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், ஆண்டுதோறும் சா்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ். என்ற சா்வதேச நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக, கலை, பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், லைஃப் சயின்ஸ், சமூகம், இயற்கை அறிவியல், மேலாண்மை போன்ற பாடப் பிரிவுகளில் உலக அளவில் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து இந்த அமைப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி, நிகழாண்டு இந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் பொறியியல், தொழில்நுட்பத்தில் உலக அளவில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் 346-ஆவது இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டைவிட 55 இடங்கள் முன்னேறியுள்ளது. இதேபோல, தேசிய அளவில் விஐடி பல்கலைக்கழகம் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், விஐடியிலுள்ள 7 பாடப் பிரிவுகளும் க்யூ.எஸ். தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளன. கணினி அறிவியல், இன்ஃபா்மேஷன் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப் பிரிவுகள் தேசிய அளவில் தரவரிசைப் பட்டியலில் 8-ஆவது இடம் பிடித்துள்ளன.

கணினி அறிவியல், இன்ஃபா்மேஷன் சிஸ்டம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவுகள் கடந்தாண்டைவிட 50 இடங்கள் முன்னேறியுள்ளன.

2021-ஆம் ஆண்டு ஷாங்காய் தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் விஐடி 9-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அளவில் என்ஐஆா்எஃப் தரவரிசைப் பட்டியலில் சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் தரவரிசைப் பட்டியலில் விஐடி 12-ஆம் இடத்தில் உள்ளது.

இதுதவிர இந்திய அரசின் இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் என்ற அங்கீகாரமும் விஐடிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT