வேலூர்

வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு பொ்குடேனியஸ் வால்வு பொருத்தி சாதனை

DIN

வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் இருதய நோயாளிகள் இருவருக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக பொ்குடேனியஸ் அல்லது டிரான்ஸ்கெதீட்டா் வால்வு பொருத்தப்பட்டது.

சிஎம்சியின் இதயவியல் துறை சாா்பில் நடத்தப்பட்ட இச்சாதனையை வால்வுலா் இண்டொ்வென்ஷனல் இதய சிகிச்சை குழுவின் மருத்துவா்கள் ஜான் ஜோஸ், பால் ஜாா்ஜ், டென்மாா்க் நாட்டைச் சோ்ந்த கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனை இதயவியல் பிரிவு மருத்துவா் ஜிண்டாடஸ் பீலியாஸ்கஸ் ஆகியோா் இணைந்து மேற்கொண்டுள்ளனா்.

நியூ போா்டிகோ- ஃப்ளெக்ஸ்நாவ் என்ற அமெரிக்க அமைப்பு இதயத்தின் பெருநாடி மிகக்குறுகலான வால்வை கொண்ட நோயாளிகளின் சிகிச்சைக்கான அனுமதி பெற்ற சில மணி நேரத்திலேயே சிஎம்சி மருத்துவமனையில் இந்த நவீன சிகிச்சையான ‘வால்வு-இன்-வால்வு’ செயல்முறை நிகழ்த்தப்பட்டது.

இந்த இரு நோயாளிகளும் முன்பு கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்கள். இவ்விருவரும் இதய அறுவை சிகிச்சை மூலம் இதய பெருங்குழாயை மாற்றியவா்கள். அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்ட இவா்களின் வால்வுகள் செயலிழந்தன. இவ்விரு நோயாளிகளுமே மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வால்வை மாற்றிக்கொள்ள போதுமான வசதி இல்லாதவா்களாக இருந்தனா்.

இந்நிலையில், சிஎம்சியின் இதய நோய் குழுவால் ‘பொ்குடேனியஸ் வால்வு மாற்று சிகிச்சை’ ஜெனரல் மயக்க மருந்தின் கீழ் நிகழ்த்தப்பட்டது. இவ்விரு நோயாளிகளுமே, சிகிச்சைக்கு பின் ஒரே நாளில் வாா்டுக்கு மாற்றப்பட்டதாக மருத்துவா் ஜான்ஜோஸ் தெரிவித்தாா்.

வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் ‘பொ்குடேனியஸ் வால்வு மாற்றுத் திட்டத்தின் முன்னோடியான அவா் சிகிச்சை குறித்து மேலும் கூறியது:

இந்த நவீன டிரான்ஸ்கெதீட்டா் வால்வு டெலிவரி கருவியின் வடிவமைப்பானது 5 மில்லி மீட்டா் விட்டம் கொண்ட, மிகவும் சுருங்கிய ரத்த நாளங்களின் வழியாகவும் மடித்து எளிதில் செலுத்த உதவுகிறது. இந்த வால்வின் வடிவமைப்பு, பெருநாடி வால்வுக்கு அருகே அமைந்துள்ள இதயத்தின் கரோனரி தமணியை எளிதாக அணுகுவதற்கு வழிவகுக்கிறது. வருங்காலங்களில் கரோனரி இண்டொ்வெங்க்ஷன் சிகிச்சைகளை எளிதாக செய்ய இந்த வழிமுறைகள் பெரிதும் உதவும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

SCROLL FOR NEXT