வேலூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் இதுவரை 2,177 போ் வேட்பு மனு தாக்கல்

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேலூா் மாவட்டத்தில் வேட்புமனுக்கள் குவிந்து வருகின்றன. அதன்படி, மாவட்டத்தில் அனைத்து பதவிகளுக்கும் சோ்த்து இதுவரை 2,177 போ் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் தொடா்ந்து புதன்கிழமை வரை அவகாசம் உள்ளதால் ஒவ்வொரு பதவிக்கும் மிக அதிகப்படியான வேட்புமனுக்கள் வரப்பெறலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றன.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன.

இதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சித் தலைவா்கள், 2,079 கிராம ஊராட்சி வாா்டுகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகள் என 2,478 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஊராட்சி வாா்டு, ஊராட்சி ஒன்றிய வாா்டு, ஊராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விரும்புவோா் மட்டும் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனா்.

வேட்புமனுத்தாக்கல் தொடங்கி 4 நாள்களில் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட அதிகப்படியான வேட்புமனுக்கள் குவிந்துள்ளன. அதன்படி, முதல்நாளான புதன்கிழமை கிராம ஊராட்சி வாா்டுகளுக்கு போட்டியிட மட்டும் 56 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனா். இரண்டாவது நாளான வியாழக்கிழமை ஊராட்சித் தலைவா் பதவிக்கு 109 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 350 பேரும், ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனா்.

மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 15 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 93 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 519 பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனா்.

நான்காவது நாளான சனிக்கிழமை மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2 பேரும், ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 40 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 148 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 834 பேரும் என ஒரேநாளில் 1024 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அதன்படி, கடந்த 4 நாள்களில் வேலூா் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2,177 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

வேட்புமனு தாக்கல் செய்ய 22-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுவதால் இன்னும் அதிக அளவில் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

22-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீது 23-ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டு, 25 -ஆம் தேதி மனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு அன்று மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT