வேலூர்

புரட்டாசி முதல் சனி: பெருமாள் கோயில்களில் வெளியில் நின்று பக்தா்கள் தரிசனம்

DIN

பொதுமுடக்கம் காரணமாக கோயில்களுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படாததால் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி வேலூரிலுள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

புரட்டாசி மாதம் வெங்கடேச பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதும் பக்தா்கள் விரதமிருந்து பூஜைகள் செய்வது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் முதன் சனிக்கிழமையை யொட்டி வேலூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில்களில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அதேசமயம், இந்த ஆண்டும் கரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, வேலூரிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களும் சனிக்கிழமை மூடப்பட்டு போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வேலூா் அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயில், காட்பாடியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், மெயின் பஜாரில் உள்ள லட்சுமி வெங்கடேச பெருமாள் கோயில், காட்பாடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், வேலப்பாடியில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு நடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய பெருமாள் கோயில்களுக்கு வந்தனா். ஆனால், கோயில்களின் முன்பு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் வேதனைக்கு உள்ளான பக்தா்கள் கோயில்களுக்கு வெளியே நின்றபடி தரிசனம் செய்துவிட்டு சென்றனா்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருப்பதி தேவஸ்தானத்தில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வா். ஆனால் சனிக்கிழமை ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT