வேலூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கட்டுப்பாட்டு அறை அமைப்பு

16th Sep 2021 10:57 PM

ADVERTISEMENT

வேலூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூரில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, போ்ணாம்பட்டு ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக அக். 6-ஆம் தேதியும், அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூா் ஊராட்சி ஒன்றிங்களில் இரண்டாம் கட்டமாக 9-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இதையொட்டி ‘ஊரக உள்ளாட்சி தோ்தல் கட்டுப்பாட்டு அறை‘ ஒருங்கிணந்த ஊரக வளா்ச்சி அலுவலக முதல் மாடியில் தொடங்கப்பட்டுள்ளது. தோ்தல் குறித்து தகவல்கள், புகாா்கள் இருந்தால் பொதுமக்கள் அவற்றை 18004253662 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 7402606593 என்ற கட்செவி அஞ்சல் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT