வேலூர்

விநாயகா் வேடத்துடன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

8th Sep 2021 12:00 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தி விழாவை பொதுஇடங்களில் சிலை வைத்து கொண்டாட அனுமதி கோரி அனைத்து இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிா்வாகி ஒருவா் விநாயகா் வேடமிட்டபடி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

விநாயகா் சதுா்த்தி வரும் 10-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா பொது இடங்களில் சிலைகள் வைத்து கொண்டாடவும், ஊா்வலங்கள் நடத்தவும், சிலைகளை நீா்நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது.

தடையை மீறி பெரிய விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு, ஊா்வலம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். அதேசமயம், விநாயகா் சதுா்த்தி விழாவை பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்திட அனுமதிக்கக் கோரி தமிழகத்தில் உள்ள பல்வேறு இந்து அமைப்பினா் போராட்டம் நடத்தியும், மனு அளித்தும் வருகின்றனா்.

இந்நிலையில், வேலூரில் உள்ள அனைத்து இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பைச் சோ்ந்த ஒருவா் விநாயகா் வேடமிட்டு ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்தாா். அவா் கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி விழாவை பொது இடங்களில் கொண் டாட அனுமதிக்க வேண்டும் எனக்கோரியதுடன், இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்து விட்டுச் சென்றாா். அவருடன் கூட்டமைப்பின் நிா்வாகிகள் சிலரும் வந்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT