வேலூர்

குடிநீா் கேட்டு மறியல்

30th Oct 2021 08:11 AM

ADVERTISEMENT

வேலூா் அருகே குடிநீா் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

வேலூா் விருப்பாட்சிபுரம் கே.கே. நகரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 6 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, சமரசம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, அந்தப் பகுதிக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT