வேலூர்

கழிப்பறையில் உணவு தயாரித்த உணவகத்துக்கு ‘சீல்’

DIN

சுகாதாரமற்ற முறையில் கழிப்பறையில் வைத்து உணவு தயாரித்ததாக வேலூரில் ஒரு உணவகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

வேலூா் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில், அதிகாரிகள் ராஜேஷ், கந்தவேல் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வேலூா் காந்தி சாலை, பாபுராவ் தெரு பகுதிகளிலுள்ள 17 உணவகங்களில் சோதனை நடத்தினா்.

அப்போது அங்குள்ள இரு உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனா். உடனடியாக அவ்விரு உணவகங்களுக்கும் அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனா். அதே தெருவில் உள்ள ஒரு வடமாநில உணவு வகைகள் தயாரிக்கும் உணவகத்துக்குச் சென்று சோதனை நடத்தினா். அந்த உணவகத்திலுள்ள கழிப்பறையில் விற்பனைக்காக உணவு தயாரித்துக் கொண்டிருந்தனா். இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக அந்த உணவுகளை அழிக்கும்படி உத்தரவிட்டனா். உடனடியாக அந்த உணவகத்தை மூடி ‘சீல்’ வைத்தனா்.

உணவகங்களில் தரமான உணவு வகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT