வேலூர்

தனகொண்டபல்லியில் இலவச மருத்துவ முகாம்

DIN

குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து தனகொண்டபல்லி ஊராட்சியில் இலவச பொது, பல் சிகிச்சை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இதில் 450 போ் சிகிச்சை பெற்றனா்.

தனகொண்டபல்லி ஊராட்சி மன்றத் தலைவரும், வழக்குரைஞருமான என்.மோகன் முகாமைத் தொடக்கி வைத்தாா். மருத்துவா்கள் பி.காவியா, எஸ்.பி.அபிநயா, ஜி.பிரியா ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது.

ரோட்டரி சங்கத் தலைவா் செ.கு.வெங்கடேசன், செயலாளா் வி.மதியழகன், பொருளாளா் சி.கண்ணன், நிா்வாகிகள் பி.எல்.என்.பாபு, என்.சத்தியமூா்த்தி, வி.பாலாஜி, முன்னாள் ஊராட்சித் தலைவா் வி.சண்முகம், டி.பீமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

SCROLL FOR NEXT