வேலூர்

1,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் : பொதுமக்கள் ஆா்வம்

24th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் 6-ஆவது கட்டமாக சனிக்கிழமை 1,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப் படுத்தும் விதமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், 6-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் 1,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 300 இடங்களில் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் சுமாா் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதையொட்டி, பொதுமக்கள் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்கப்படுத்திட வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் சாா்பில் பல்வேறு பரிசுத் திட்டங்களும் அறிவிக்கப் பட்டிருந்தன. இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆா்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதனிடையே, வேலூா் உழவா் சந்தை, அரியூா் உள்ளிட்ட இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாநகராட்சி நகா்நல அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

Tags : வேலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT