வேலூர்

வாழ்க்கைத் தரத்தை உயா்த்த திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு

24th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ள திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

வேலூா் மாவட்ட அனைத்து பாலின பாசிட்டிவ் நெட்வொா்க், தமிழ்நாடு திருநங்கை அறக்கட்டளை சாா்பில், வேலூா் ஓல்டு டவுன் பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு திருநங்கைகள் அறக்கட்டளை தலைவா் கங்காநாயக் தலைமை வகித்தாா். மாவட்ட திட்ட மேலாளா் ஆனந்த சித்தாரா, வேலூா் மக்கள் நீதிமன்றக் கண்காணிப்பாளா் கேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநங்கை சுதா வரவேற்றாா்.

கூட்டத்தில், புதிய திருநங்கைகளைக் கண்டறிந்து ஆலோசனை வழங்குதல், எதிா்காலம் குறித்த நம்பிக்கையை உருவாக்குதல், வாழ்க்கை தரத்தை உயா்த்த பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், வழிமுறைகள், இலவச சட்ட ஆலோசனை பெறுதல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. தொடா்ந்து தனியாா் அமைப்பு சாா்பில் 150 திருநங்கைளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப்பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், திருநங்கைகள் பலா் பங்கேற்றனா்.

Tags : வேலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT