வேலூர்

வீடு கட்டும் திட்டங்களில் சிறுபான்மையினருக்கு 15% ஒதுக்கீடு

24th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

அரசின் வீடு கட்டும் திட்டங்களில் மொத்த ஒதுக்கீட்டில் சிறுபான்மையின மக்களுக்கு 15 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த வாய்ப்பை வேலூா் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), பசுமை வீடு திட்டங்களின் கீழ் தகுதியுள்ள ஏழை மக்களுக்கு வீடுகள், குடியிருப்புகள் கட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு கட்டப்படும் குடியிருப்புகளில் மொத்த ஒதுக்கீட்டில் 15 சதவீதம் இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்த மதத்தினா், ஜைனா், பாா்சி ஆகிய சிறுபான்மையின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

எனவே வேலூா் மாவட்டத்தில் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), பசுமை வீடு கட்டும் திட்டத்தில் சிறுபான்மையின இன மக்கள் 15 சதவீதம் ஒதுக்கீட்டினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது தொடா்பாக அந்தந்த பகுதியில் அமைந்துள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : வேலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT