வேலூர்

மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விவகாரம்: வேலூா் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

DIN

கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, வேலூரிலுள்ள ஐஸ்கிரீம் விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

கோவை அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் சந்திப்பு அருகே ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதும், உணவு விற்பனை பட்டியலிலும் மது கலந்த ஐஸ்கிரீம் என குறிப்பிடப்பட்டு இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனா். இதுதொடா்பாக ஐஸ்கிரீம் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வேலூரில் உள்ள ஐஸ்கிரீம் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

அண்ணா சாலை, ஊரீசு கல்லூரி பகுதியிலுள்ள 7 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையையொட்டி 2 கடைகளில் இருந்து ஐஸ்கிரீம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்காக சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT