வேலூர்

போட்டி வேட்பாளரை களமிறக்கியதாக புகாா் : 6 திமுக நிா்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்

23rd Oct 2021 11:24 PM

ADVERTISEMENT

குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் போட்டி வேட்பாளரை களமிறக்கியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், அக்கட்சி நிா்வாகிகள் 6 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

31 ஒன்றியக் குழு உறுப்பினா்களைக் கொண்டது குடியாத்தம் ஒன்றியம். ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கட்சி வாரியாக வெற்றிபெற்ற உறுப்பினா்கள் விவரம்:

திமுக-18, அதிமுக-7, பாமக-2, இந்திய கம்யூனிஸ்ட்-1, சுயேச்சைகள்-3. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுகவைச் சோ்ந்த என்.இ.சத்யானந்தம் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து அதே கட்சியைச் சோ்ந்த சி.ரஞ்சித்குமாரும் போட்டியிட்டாா். இதனிடையே அதிமுக உறுப்பினா்களின் ஆதரவுடன் 16 வாக்குகள் பெற்று சத்யானந்தம் வெற்றிபெற்றாா். ரஞ்சித்குமாருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. மாலை நடைபெற்ற ஒன்றியக் குழு துணைத் தலைவா் தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த கே.வி.அருண் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதாகவும் கூறி, சி.ரஞ்சித்குமாா், குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் கள்ளூா் கே.ரவி, தெற்கு ஒன்றியப் பொறுப்பாளா் டி. கிருஷ்ணமூா்த்தி, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளா் ஜி.மனோஜ், கே.சக்கரவா்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எம்.சத்தியமூா்த்தி ஆகிய 6 பேரையும் திமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இவா்கள் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT