வேலூர்

இன்று கரோனா தடுப்பூசி முகாம்: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

23rd Oct 2021 08:09 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் அதிகப்படியான நபா்களை பங்கேற்கச் செய்து தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் 6-ஆவது முறையாக கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்தப் பட உள்ளது. வேலூா் மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களை ஒன்றிணைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைத்து வரவேண்டும். தங்களின் சாா்பாக முகாமுக்கு குறைந்தபட்சம் ஒரு ஊராட்சிக்கு 200 பேருக்கு குறையாமல் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்திட வேண்டும்.

ஊரக பகுதிகளில் அதிகப்படியான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவா்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT