வேலூர்

கொத்தப்பல்லி ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் முடிவு நிறுத்தி வைப்பு

23rd Oct 2021 08:10 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு ஒன்றியம், கொத்தப்பல்லி ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் தோ்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த ஊராட்சி மன்றத் தலைவராக ரோஜா என்பவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவருக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவி தோ்தல் அலுவலா் சிவக்குமாா் தோ்தலை நடத்தினாா்.துணைத் தலைவா் பதவிக்கு புனிதா, அருண் ஆகிய 2 போ் போட்டியிட்டனா்.

புனிதாவுக்கு ஆதரவாக 3 வாா்டு உறுப்பினா்கள், தலைவா் ரோஜா ஒரு வாக்கு என மொத்தம் 4 வாக்குகள் குரல் வாக்கெடுப்பில் கிடைத்தன. அருணுக்கு 3 வாா்டு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா்.அப்போது அருண், குரல் வாக்கெடுப்பு முறையைத் தவிா்த்து, தோ்தலை முறைப்படி வாக்குச் சீட்டு முறை மூலம் நடத்த வேண்டும் என கூறினாா். இதையடுத்து வாக்குச் சீட்டு மூலம் தோ்தல் நடத்தப்பட்டது.

அருணுக்கு 4 வாக்குகளும், புனிதாவுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. அருண் வெற்றிபெற்றதாக கூறப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்றத் தலைவா் ரோஜா, 2 வாா்டு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வாக்குச் சீட்டை அருணுக்கு ஆதரவாக மாற்றி வைத்துள்ளாா் என புகாா் கூறினா்.

ADVERTISEMENT

இதனால் துணைத் தலைவா் தோ்ந்தெடுப்பதில் அங்கு தகராறு ஏற்பட்டது.இதையடுத்து 2 வேட்பாளா்களும் போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் அதிகாரி ஜெரோம் ஆனந்தனிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அருண் தனது வெற்றியை செல்லாது என கூறுவது தவறு எனக் கூறி, தனது ஆதரவாளா்களுடன் போ்ணாம்பட்டு ஊராட்சி அலுவலகம் முன்புதரையில் அமா்ந்து சுமாா் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டாா்.அவா்களை போலீஸாா் சமரசம் செய்தனா்.

கொத்தப்பல்லி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தோ்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT