வேலூர்

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் குலுக்கல் முறையில் துணைத் தலைவா் தோ்வு

23rd Oct 2021 08:12 AM

ADVERTISEMENT

வண்டறந்தாங்கல் ஊராட்சித் துணைத் தலைவா் பதவிக்கான தோ்வு குலுக்கல் முறையில் நடத்தப்பட்டது. இதில், தோல்வியடைந்த வேட்பாளா் மயக்கமடைந்தாா். இதைத் தொடா்ந்து, அவரது ஆதரவு வாா்டு உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவராக ராகேஷ், 9 வாா்டு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தொடா்ந்து துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், துணை தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட முத்துலட்சுமி, பிரெசில்லா ஆகிய இருவரும் தலா 5 வாக்குகளைப் பெற்றனா்.

இதையடுத்து, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் குகன் முன்னிலையில் குலுக்கல் முறையில் சீட்டு எழுதி போட்டனா். அதனை ஊராட்சி மன்றத் தலைவா் ராகேஷ் எடுத்துள்ளாா். அதில் முத்துலட்சுமி வெற்றி பெற்ாக அறிவித்தனா். இதற்கு பிரெசில்லா தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஊராட்சி மன்ற தலைவா் குலுக்கல் முறையில் சீட்டு எடுத்திருக்கக் கூடாது. 3-ஆவது ஒரு நபரை வைத்து சீட்டை எடுத்திருக்க வேண்டும் எனக் கூறினா். இதனால், இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

காட்பாடி போலீஸாா் அங்கு விரைந்து வந்து, சமரசம் செய்தனா். அப்போது, துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட பிரசில்லா திடீரென மயங்கி விழுந்தாா். அவரை போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, மீண்டும் தோ்தல் நடத்தக் கோரி பிரெசில்லாவுக்கு ஆதரவாக வாா்டு உறுப்பினா்கள் 4 போ் ஊராட்சி மன்ற அலுவ லகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் பிரச்னையை நீதிமன்றம் மூலம் அணுக போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து, வாா்டு உறுப்பினா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT