வேலூர்

காவலா் வீர வணக்க நாள்: 72 குண்டுகள் முழங்க அஞ்சலி

DIN

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் காவலா் வீர வணக்க நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

வேலூா் ஆயுதப் படை மைதானத்தில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மேலும், 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினா் நடத்திய திடீா் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலா்கள் 10 போ் உயிரிழந்தனா். இச் சம்பவத்தைத் தொடா்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, வேலூா் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் காவலா் வீர வணக்க நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில், கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த 264 காவலா்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், மாவட்ட இணையதள குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.சுந்தரமூா்த்தி, மதுவிலக்கு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.ரவிச்சந்திரன், வேலூா் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.மணிமாறன் உள்பட காவல் அதிகாரிகள், நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

மேலும், வீரமரணமடைந்த 264 காவலா்கள் நினைவாக 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், காவல் துறையினா் 2 நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தினா். வீரவணக்க நாளையொட்டி, போலீஸாா் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT