வேலூர்

கரோனா நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் கருவிகள் வழங்கும் வங்கிகாட்பாடியில் தொடக்கம்

22nd Oct 2021 08:13 AM

ADVERTISEMENT

கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் கருவி வழங்கும் வங்கி காட்பாடியில் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவோருக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கும் வங்கி காட்பாடி விருதம்பட்டிலுள்ள இளஞ்சிறாா் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை கோட்டாட்சியா் செ.விஷ்ணுபிரியா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இதுகுறித்து செஞ்சிலுவை சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் கூறியது:

இரு ஆக்சிஜன் கருவிகள் உள்ளன. ஆக்சிஜன் கருவியைப் பயனாளிகளே வந்து எடுத்துச் சென்று, பயன்பாடு முடிந்தவுடன் திருப்பி அளிக்க வேண்டும். அதிகப்பட்சமாக 15 நாள்கள் வரை மட்டுமே உபயோகப்படுத்த அனுமதிக்கப்படும். கருவிக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டாலோ, பழுதானாலோ அந்த தொகை பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும். பயனாளிகள் முகக்கவசம், குழாய்களை தங்களது சொந்த செலவில் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை சுத்திகரிப்பு செய்து அடுத்தவருக்கு கொடுக்கப்படும்.

ADVERTISEMENT

பயனாளிகள் திரும்பப் பெறும் வைப்பு தொகையாக ரூ.5,000 செலுத்த வேண்டும். ஒருவா் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மருத்துவ ஆவணங்கள், மருத்துவரின் பரிந்துரை கடிதங்களை அளிக்க வேண்டும்.

முகவரி சான்று, ஆதாா் அட்டையை சமா்ப்பிக்க வேண்டும். ஆக்சிஜன் கருவி இருப்பு உள்ளதைப் பொருத்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்து வழங்கப்படும்.

‘ இந்திய செஞ்சிலுவைச் சங்கம், காட்பாடி வட்ட கிளை எண் 1, முதல் குறுக்கு தெரு, டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், காந்தி நகா், காட்பாடி 632007’ என்ற முகவரியில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு 9443345667, 9944141099, 9443490909 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, மாவட்டக் கல்வி அலுவலா் த.சம்பத், செஞ்சிலுவைச் சங்கத் துணைத் தலைவா் வி.பாரிவள்ளல், செயலாளா் எஸ்.எஸ்.சிவவடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT