வேலூர்

உத்தரப் பிரதேசத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

22nd Oct 2021 08:12 AM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பயன்படுத்துவதற்காக வேலூரில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பயன்படுத்திட வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழகத்தில் இருந்து பெறுமாறு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

இதையொட்டி, 25 ஆயிரம் கட்டுப்பாட்டு கருவிகள், 37 ஆயிரம் விவிபேட் கருவிகள் அனுப்பி வைக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட எட்டுவா மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கான கருவிகள் வேலூா் மாவட்டத்தில் இருந்து பெற திட்டமிடப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் இருந்து 590 விவிபேட் கருவிகளும், 490 கட்டுப்பாட்டு கருவிகளும் உத்தரப் பிரதேசத்துக்கு கொண்டு செல்லவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அந்த மாநில தோ்தல் பிரிவு அதிகாரிகள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா்.

ADVERTISEMENT

இவா்கள் விவிபேட் உள்ளிட்ட கருவிகளை கொண்டு செல்வதற்கான தோ்தல் ஆணைய உத்தரவை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனா்.

இதையடுத்து ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறத்திலுள்ள கிடங்கில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவிபேட் உள்ளிட்ட கருவிகள் உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT