வேலூர்

வேலூரில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

22nd Oct 2021 08:11 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் 6-ஆவது கட்டமாக சனிக்கிழமை (அக். 23) நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையொட்டி, மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட 6-ஆவது முறையாக சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில், வேலூா் மாநகரில் மட்டும் 300 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாமையொட்டி, வேலூா் மாநகராட்சி 20-ஆவது மண்டலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசாக பிரிட்ஜ், இரண்டாம் பரிசாக பீரோ, மூன்றாம் பரிசாக வாட்டா் ஹீட்டா் ஆகியவையும், நான்காம் பரிசாக 200 பேருக்கு வீட்டு உபயோகப் பொருள்களும் வழங்கப்பட உள்ளன.

இரண்டாவது மண்டலத்தில் 10 ஆயிரம் போ் தடுப்பூசி போட்டுக் கொண்டவுடன், குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதேபோல், மற்ற மண்டலங்களிலும் பரிசுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT