வேலூர்

விசைத்தறித் தொழிலாளா் குடும்பத்துக்கு உதவி

22nd Oct 2021 08:13 AM

ADVERTISEMENT

குடியாத்தம் காளியம்மன்பட்டியில் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட விசைத்தறித் தொழிலாளியின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை உதவிகள் வழங்கப்பட்டன.

காளியம்மன்பட்டியைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளி ஜெயகுமாா்(28) , செப். 29- ஆம் தேதி தறிக் கூடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவா் இந்த முடிவை எடுத்ததற்கு வறுமை, கடன் பிரச்னைகளே காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இறந்த ஜெயக்குமாருக்கு குமுதா என்ற மனைவியும், நாராயணன் (6), சூரியபிரகாஷ் (3) என்ற 2 மகன்களும் உள்ளனா். அவரது குடும்பம் வறுமையில் வாடுவதை அறிந்த காங்கிரஸ் கட்சியின் நெசவாளா் அணி மாநிலப் பொருளாளா் அனகை விமல்காந்த் வியாழக்கிழமை குடியாத்தம் வந்து, ஜெயகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

இதையடுத்து, ஜெயகுமாரின் குடும்பத்துக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களையும், ரொக்கம் ரூ.2 ஆயிரத்தையும் வழங்கினாா்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் நெசவாளா் அணி மாவட்டத் தலைவா் எஸ்.எம்,தேவராஜ், நகரத் தலைவா் கோ.ஜெயவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT